
‛நோ என்றால் ‛நோ தான் - குஷ்பு பதிவு
சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றி நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு : சினிமா மட்டுமல்லாது எல்லா துறையிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதேசமயம் அதை உடனே சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் குரல் கொடுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ‛நோ" என்றால் ‛நோ" தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒரு போதும் விட்டுத்தராதீர்கள்"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…