
மாதவனுடன் மோதும் நிமிஷா
சக்தி வாய்ந்த கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை நடத்தும் ஒரு பெரியவர் தனக்கு பிறகு தனது சாம்ராஜ்யத்தை ஆள தகுதியான ஒருவரை தேடுகிறார். அந்த இடத்தை அடைவதற்கு மாதவனும், நிமிஷாவும் நடத்தும் போட்டிதான் கதை. முதன் முதலாக லேடி கேங்ஸ்டராக நிமிஷா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
தொடர் குறித்து மாதவன் கூறும்போது, "ஒரு கதை கேட்கும்போது உங்களுக்குள் இருக்கும் நடிகரை அந்தக் கதை சந்தோஷப்படுத்தும்போது நிச்சயம் அதில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அப்படித்தான், நான் "லெகஸி" சீரிஸிலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்திய ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு சிறப்பான கதை மற்றும் திருப்பத்துடன் இது உருவாகி இருக்கிறது. இயக்குநர் சாருகேஷ் சேகர், ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி" என்றார்.
நிமிஷா சஜயன், கூறும்போது, "எமோஷன், த்ரில் ஆகியவை கொண்ட இந்தக் கதையில் அற்புதமான குழுவினர் பணியாற்றியுள்ளனர். இரண்டாவது முறையாக ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் பணியாற்றி இருக்கிறேன். எங்கள் இயக்குநர் சாருகேஷ் மற்றும் அவரது திறமையான குழுவினர் பார்வையாளர்கள் விரும்பும்படியான அற்புதமான கதையை கொடுத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!