மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால்
ஏப் 23, 2024
Advertisement
மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர் நித்தி அகர்வால். அறிமுகமே "முன்னா மைக்கேல்" என்ற பாலிவுட் படத்தில்தான். அதன்பிறகு தெலுங்கிற்கு வந்த அவர் அங்கு மளமளவென நடித்தார். "ஈஸ்வரன்" படத்தின் மூலம் தமிழுக்கு வந்தர், "பூமி" படத்தில் நடித்தார், கடைசியாக "கலக தலைவன்" படத்தில் நடித்தார். இதற்கு இடையில் ஒரு இளம் தமிழ் நடிகருடன் லிவிங் டு கெதராக வாழ்கிறார். தெலுங்கு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார் என பல தகவல்கள் வெளிவர அவரது மார்க்கெட் சரிந்தது.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார். தற்போது இரண்டு பெரிய படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார். பவன் கல்யாண் ஜோடியாக "ஹரி ஹர வீரமல்லு" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார், கிரிஷ் ஜெகன்னாத் இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். மெகா சூர்யா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
அடுத்து நித்தி அகர்வால் பிரபாஸ் ஜோடியாக "தி ராஜா சாப்" படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார், தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. மாளவிகா மோகனன், ரித்தி குமார், யோகி பாபு, வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விடலாம் எனறு நித்தி உறுதியாக நம்புகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!