
காட்பாதர் படப்பிடிப்பை முடிக்கப் போகும் நயன்தாரா
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கு முன்பு சிரஞ்சீவி மனைவியாக "சைரா" படத்தில் நடித்த நயன்தாரா இந்தப் படத்தில் தங்கையாக நடித்து வருகிறார்..
மோகன்ராஜா இயக்கத்தில் தமிழில் வெளிவந்த "தனி ஒருவன்" படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு இருவரும் "வேலைக்காரன்" படத்திலும் இணைந்து பணிபுரிந்தனர். இப்போது தெலுங்கில் "காட்பாதர்" படம் மூலமும் இணைந்துள்ளனர்.
நயன்தாராவின் முக்கியக் காட்சிகள் அனைத்தும் "காட்பாதர்" படத்திற்காகப் படமாக்கப்பட்டுவிட்டதாம். விரைவில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பை நயன்தாரா முடித்துவிடுவார் என்கிறார்கள். சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள "ஆச்சார்யா" படத்திற்குப் பிறகு "காட்பாதர்" வெளியாகும்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…