
புதுத் தாலியை மறைக்காத நயன்தாரா
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் காதல் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. தற்போது இந்த புதுமணத் தம்பதியினர் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருகிறார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவப்பட்டு வருகிறது. அதில் கழுத்தில் புதுத் தாலியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமாக உள்ளது. பொதுவாக திருமணம் முடிந்த புதுப் பெண்கள், அதிலும் நடிகைகள் போன்று திரைப்பிரபலங்கள் வேலைக்குச் செல்லும் போது அந்தத் தாலியை ஆடைக்குள் மறைப்பது வழக்கம். தான் புதிதாகத் திருமணமான பெண் என காட்டிக் கொள்ள கூச்சப்படுவார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே அந்த புதுத் தாலி தெரிந்தாலும் பரவாயில்லை எனச் செல்வார்கள்.
நடிகை நயன்தாரா தன்னுடைய புகைப்படங்களில் புதுத் தாலியை மறைத்துக் கொள்ளாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தின் மருமகளாக தமிழ்க் கலாச்சாரத்தை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!