
இன்ஸ்பிரேஷன் - அஜித் பற்றி நடிகர் நவ்தீப்
அஜித்துடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “இன்ஸ்பிரேஷன் இப்படித்தான் தோற்றமளிக்கும், திரையிலும் திரைக்குப் பின்னாலும்,” என்று குறிப்பிட்டுள்ள நவ்தீப் மேலும், “இந்த மனிதர் தூய்மையான அன்பு கொண்டவர். "ஹாய்" என அவர் அழைக்கும் குரல் உங்களை வியக்க வைக்கும். நான் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவருடைய எளிமை, அறிவார்ந்த குணம் ஆகியவற்றை அனுபவிப்பது ஒரு பேரின்பம். உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர். அதற்காகத்தன் "தல",” எனப் பாராட்டியுள்ளார்.
அஜித்துடன் நவ்தீப் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் எடுத்துக் கொண்டவை. சில பைக் ரேசர்களுடன் அஜித் அப்போது பைக் பயணம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்டவை. அவற்றைத்தான் இவ்வளவு நாட்கள் கழித்து பகிர்ந்துள்ளார் நவ்தீப்.
இதுநாள் வரை இப்படி ஒரு ரிடுவீட், லைக்குகளை நவ்தீப் வாங்கியிருக்காத அளவிற்கு அஜித் ரசிகர்கள் அவரது டுவீட்டை கொண்டாடி வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!