முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் நட்டி
அக் 14, 2024
Advertisement
தமிழ்நாட்டை சேர்ந்த நட்டி என்கிற நட்ராஜ் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்தார். பின்னர் நடிகராகி நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, கதம் கதம், எங்கிட்ட மோதாதே, கர்ணன், மகாராஜா படங்களில் நடித்தார். தற்போது வெளிவர இருக்கும் "பிரதர்" படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் "ஆண்டவன் அவதாரம்". இதற்குமுன் "நஞ்சுபுரம்", "அழகு குட்டி செல்லம்", "சாலை" ஆகிய படங்களை இயக்கியுள்ள சார்லஸ், தனது லைட் சவுண்ட் அன்ட் மேஜிக் நிறுவனத்துக்காக இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ராகவ் நடிக்கிறார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, நவ்னீத், ராகவ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் சார்லஸ் கூறும்போது "இப்படத்துக்கு "அவதாரம்" என்று பெயரிட நினைத்தேன். அந்த டைட்டில் நாசரிடம் இருப்பதால், "ஆண்டவன் அவதாரம்" என்று பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை - மகன், அண்ணன் - தம்பி வேடமாக இருக்காது. சயின்ஸ் பிக்ஷன் என்றாலும், நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து படமாக்குகிறோம்" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!