
நானே வருவேன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவக்கம்
ஜூன் 08, 2022
Advertisement
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், இந்துஜா, யோகிபாபு, எல்லி அர்வம் , பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் "வாத்தி" படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!