
முத்தையா இயக்கும் சுள்ளான் சேது முதல் பார்வை வெளியானது!
ஏப் 14, 2024
Advertisement
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற கிராமத்து ஆக்ஷன் படங்களைக் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த "காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்" என படம் பெரிதளவில் தோல்வி அடைந்தது. இதனால் இவருக்கு அடுத்து எந்த முன்னனி நடிகர்களின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது இயக்கத்தில் தன் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகபடுத்தி புதிய படம் ஒன்றைக் இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இப்போது இந்த படத்திற்கு "சுள்ளான் சேது" என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!