
இறுதி கட்டத்தில் முத்தையா முரளிதரன் படம்: அக்டோபர் ரிலீஸ்
இதில் முத்தையா முரளிதரனாக "ஸ்லம்டாக் மில்லியனர்" புகழ் மதுர் மிட்டல் நடிக்கிறார். முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய்சேதுபதி விலகி கொண்டார். முத்தையா முரளிதரன் மனைவியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். நரேன், நாசர், வேல ராம்மூர்த்தி, ரித்விகா, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், ஷரத் லோஹித்யா. உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணி நடந்து வருகிறது. படத்தின் இந்திய தியேட்டர் திரையீட்டு உரிமத்தை ஸ்ரீதேவி மூவீஸின் உரிமையாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் பெற்றுள்ளார். இந்த படம் தமிழில் படமாக்கப்பட்டது. தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!