இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா
மார் 15, 2025
Advertisement
கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், பிரகாஷ் ராஜ், நதியா, அசின் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி". இப்படம் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மோகன் ராஜா அவரது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதன்படி, "இளைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ரீரிலீஸ் என்கிற டிரெண்ட் நீங்கள் தான் உருவாக்கினீர்கள். ஒரு சின்ன மாற்றத்திற்காக எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் ரீ ரிலீஸை உங்கள் அம்மாவோடும் குடும்பத்தோடும் பாருங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கொண்டாடிய படத்தின் தியேட்டர் அனுபவத்தை அவர்களுக்கு மீண்டும் கொடுங்கள்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!