
மோகனின் ஹரா
ஜன 01, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் மோகன். வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த இவர் ஒருக்கட்டத்தில் நடிப்பை விட்டு விலகினார். சில ஆண்டுகளுக்கு முன் சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவில் நாயகனாக நடிக்க உள்ளார். இவர் நடிக்கும் படத்திற்கு ஹரா என பெயரிட்டுள்ளனர். இதை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். நீண்ட தாடி உடன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் மோகன். திரில்லர் படமாக உருவாகிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!