"96" பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் "மெய்யழகன்" . இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி உடன் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது . இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!