
மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி
இப்படத்தை பற்றி இயக்குநர் தேவகுமார் கூறுகையில், ‛‛நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் சிக்னல் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும். நாயகியை மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள் ஏன் எதற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். படத்திற்கு பரிமள வாசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கார்த்திகேயன். படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!