
மழை பிடிக்காத மனிதன் படப்பிடிப்பு நிறைவு
ஜூன் 16, 2022
Advertisement
விஜய் ஆண்டனி சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் "மழை பிடிக்காத மனிதன்" என்ற படத்தில் நடித்து வந்தார் . இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சரத்குமார், டாலி தனஞ்செயா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது ஒருபக்கம் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு டாமன், டையூ பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!