மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன் : முதல் பார்வை வெளியீடு
மே 07, 2024
Advertisement
பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் சிவி குமார். கடந்த 2017ல் மாயவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து இயக்கம், தயாரிப்பில் பயணித்து வரும் இவர் இப்போது ‛மாயா ஒன்" என்ற படத்தை இயக்குகிறார். மாயவன் படத்தில் நடித்த சந்தீப் கிஷனே இதிலும் நாயகனாக நடிக்கிறார். மாயவன் படத்தின் அடுத்தபாகமாக இந்தபடம் தயாராகிறது.
நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(மே 7) படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அவரின் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சந்தீப் கிஷனின் கை சூப்பர் ஹீரோ மாதிரியான கை போன்று உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்தப்படம் சூப்பர் ஹீரோ தொடர்புடையாக படமாக இருக்கலாம் என தெரிகிறது. இதில் வில்லனாக கத்தி பட வில்லனும், பாலிவுட் நடிகருமான நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!