மத்தகம் பல சீசன்கள் தயாராகும் : அதர்வா தகவல்
ஆக 18, 2023
Advertisement
"கிடாரி", ஜெயலலிதாவின் வாழ்க்கை தொடரான "குயின்" ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள "மத்தகம்" வெப் தொடர் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடர் பல சீசன்களாக வெளிவரும் என்று அதர்வா கூறினார்.
தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது "மத்தகம் 2018, 19ல் ஆரம்பிச்சது. கவுதம் மேனன் சார் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக்காரணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தான். அவங்களுக்கு ரொம்ப நன்றி.
பிரசாத் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவனா தெரிய மாட்டேனானு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும்.
இந்த தொடருக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு கிடைக்கும், அடுத்தடுத்த சீசன்களை உருவாக்கும் வகையில் கதைகளை எழுதி தயாராக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாத். நானும், இந்த டீமும் தொடர்ந்து பயணிக்கும் ஆவலுடன் இருக்கிறோம். ஆங்கில தொடர்களை போன்று இதுவும் பல சீசன்கள் உருவாகும்" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!