கைதி 2க்கு முன்பாக உருவாகும் மார்ஷல்
ஜூலை 10, 2025
Advertisement
கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த "மெய்யழகன்" படம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படமாக அமைந்தது. இந்த வருடத்தில் அவர் நடித்து வரும் "சர்தார் 2" படம் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாகவே ஆரம்பமான "வா வாத்தியார்" படம் அதற்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள "கைதி 2" படம் இந்த ஆண்டு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. "கூலி" படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு சில மாதங்கள் ஓய்வெடுத்த பிறகே அவர் "கைதி 2" பக்கம் வருவார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால், "டாணாக்காரன்" படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் "மார்ஷல்" படத்தை இன்று பூஜை, படப்பிடிப்புடன் ஆரம்பித்துவிட்டார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகு "கைதி 2" அல்லது "ஹிட் 4" படத்தில் கார்த்தி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நடிகருக்குமே திட்டமிட்டபடி படத்தின் வேலைகள் நடப்பதில்லை. சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரது படங்கள் மாறி மாறி நடந்து வருகின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!