போட்டியின்றி வரும் மார்க் ஆண்டனி
செப் 12, 2023
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா மற்றும் பலர் நடித்துள்ள படம் "மார்க் ஆண்டனி". இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.
அதே தேதியில் "சந்திரமுகி 2" படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென அப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதி தள்ளி வைத்துவிட்டார்கள். இதனால், எந்தவிதமான போட்டியும் இல்லாமல் "மார்க் ஆண்டனி" படம் வெளியாகப் போகிறது. இப்படம் தவிர வேறு சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது.
"மார்க் ஆண்டனி" படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய டிரைலர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "டைம் டிராவல்" அடிப்படையிலான கதை என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‛இரும்புத் திரை" படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளிவந்த “சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி” ஆகிய ஏழு படங்களுமே தோல்விப் படமாகத்தான் அமைந்தது. அந்த இறக்கத்தை "மார்க் ஆண்டனி" ஏற்றிவிடுமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!