
ஏப்., 27ல் ‛மார்க் ஆண்டனி டீஸர் வெளியாகிறது
ஏப் 25, 2023
Advertisement
நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "மார்க் ஆண்டனி" படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சுனில், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அதிரடி ஆக் ஷன் படமாக இந்தப்படம் உருவாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்போது படத்தின் டீஸர் குறித்து அறிவித்துள்ளனர். அதன்படி, மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!