வெப் தொடர் இயக்கும் மாரி செல்வராஜ்
செப் 26, 2022
Advertisement
எழுத்தாளராக இருந்த மாரி செல்வராஜ், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். கதிர், ஆனந்தி நடித்த "பரியேறும் பெருமாள்" படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர். அதன் பிறகு தனுஷ் நடித்த "கர்ணன்" படத்தின் மூலம் விருதுகளை குவித்தார்.
தற்போது "மாமன்னன்" படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதன் பிறகு அவர் துருவ் விக்ரம் நடிக்கும் கபடி வீரன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக வெப் தொடர் ஒன்றை அவர் இயக்க இருக்கிறார். இதில், கலையரசன் நாயகனாக நடிக்கிறார். திருநெல்வேலி அருகே இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. மாரி செல்வராஜின் உதவியாளர்கள், ஸ்கிரிப்ட பணி மற்றும் லொக்கேஷன் தேர்வு, நடிகர், நடிகைகள் தேர்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொடரை இயக்கி முடித்து விட்டு கபடி வீரன் படத்தை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!