மரகதநாணயம் 2 படம் தொடங்கியது
பிப் 16, 2026
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கிகல்ராணி, முனிஸ்காந்த், ஆனந்த் ராஜ் நடிப்பில், 2017ம் ஆண்டு வெளியான மரகதநாணயம் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்தை எடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார் இயக்குனர். படத்தை தயாரித்த ஆக்சிஸ் நிறுவன அதிபர் மறைந்ததால் முயற்சிகள் தடைப்பட்டன.
இந்நிலையில், ஆக் சிஸ் நிறுவனமும், பேஷன் ஸ்டூடியோவும் இணைந்து மரகதநாணயம் 2வை தயாரிக்க முன் வந்தன. அந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. நடிகர்கள் கார்த்தி, ஆர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் பூஜைக்கு வந்து வாழ்த்தியுள்ளன. இரண்டாம் பாகத்தில் புதிதாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். முதல் பாகம் போலவே பக்கா காமெடியுடன் பேண்டஸி படமாக தயாராகி உள்ளதாம். இந்த படத்தில் நடித்த ஆதியும், நிக்கியும் பின்னர் நிஜ வாழ்க்கையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!