நீயெல்லாம் ஏன் நடிக்கிற என்று கிண்டல் செய்தார்கள்: ஸ்ருதி செல்வம்
அக் 13, 2021
Advertisement
பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் படம் 3.33 பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள படம். காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் குறும்பட நடிகை ஸ்ருதி செல்வம். இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னோட நடிப்பு, குறும்படம் மற்றும் ஆல்பமில் தான் தொடங்கியது, ஆரம்பத்தில் "நீயெல்லாம் ஏன் நடிக்கிற" என்று தான் கேட்டார்கள். கிண்டல் செய்தார்கள். நிறைய அவமானங்களை சந்தித்தேன். அதையெல்லாம் பாஸிட்டிவாக எடுத்து கொண்டு தான், இந்த இடத்தை வந்தடைந்திருக்கிறேன். என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!