சமந்தா இதை செய்ய வேண்டாம் - மனோஜ் பாஜ்பாய் அறிவுரை
பிப் 18, 2023
Advertisement
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தவர் தற்போது மீண்டுள்ளார். தொடர்ந்து பழநி முருகனை சமீபத்தில் தரிசனம் செய்தார். தற்போது தனது அடுத்தப்படமான குஷியில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதனால் தனது உடலை பிட்டாக மாற்றும் முயற்சியில் முன்பு போல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா உடன் தி பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த மனோஜ் பாஜ்பாய் அவருக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு பேட்டியில், ‛‛சமந்தா கடின உழைப்பாளி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் மிகவும் வலி தரக்கூடிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். எளிய உடற்பயிற்சிகள் இப்போதைக்கு அவர் மேற்கொள்ள வேண்டும்"" என கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!