
மகாராஜா பட டிரைலர் ரெடி
மே 29, 2024
Advertisement
குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 50வது படமாக "மகாராஜா" எனும் படத்தில் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜிஸ் பீ லோகனாஷ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரெடியாகி விட்டது. நாளை(மே 30) மாலை 5 மணியளவில் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…