
மீண்டும் இணையும் ‛மெட்ராஸ் பட கூட்டணி
செப் 22, 2023
Advertisement
கடந்த 2014ம் ஆண்டில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் "மெட்ராஸ்". இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தனர். விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு எல்லாம் அடுத்த ஆண்டில் தான் தொடங்கும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!