
கவர்ச்சி ரூட்டிற்கு மாறும் மடோனா செபஸ்டியன்
ஆக 29, 2022
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் மடோனா செபஸ்டின். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் என்ற படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு கவண், பா.பாண்டி உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் கொம்பு வச்ச சிங்கமடா என்ற படத்தில் நடித்தார். அடுத்தபடியாக எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லாததால் தனது உடல் எடையை குறைத்து கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மடோனா. இப்படி திடீரென்று கிளாமர் புகைப்படங்களை மடோனா செபாஸ்டியன் வெளியிட்டிருப்பதை வைத்து பார்க்கும்போது கவர்ச்சிகரமாக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதை அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!