மீண்டும் ஒரு விஞ்ஞானி படம் : ஜி.டி நாயுடுவாக மாறுகிறார் மாதவன்
ஏப் 06, 2023
Advertisement
ராக்கெட்டரி - தி நம்பி எபெக்ட்ஸ் என்ற படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை இயக்கி, நடித்து வெற்றி கண்டவர் மாதவன். தற்போது மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.
தமிழகத்தில் பிறந்த ‛இந்தியாவின் எடிசன்" என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி இந்தப்படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அனேகமாக மாதவனே இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கவும் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!