சிவகார்த்திகேயன், அதிதி பாடிய ‛மாவீரன் பட 2வது சிங்கள் அப்டேட்
ஜூன் 13, 2023
Advertisement
மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற ஜூலை 14 அன்று வெளியாகும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த சீனா சீனா பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இப்போது இந்த படத்தில் இருந்து 2வது சிங்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. வண்ணாரபேட்டையிலே என்கிற இந்த பாடல் நாளை(ஜூன் 14ம் தேதி) வெளியாகும் என்பதை ஒரு ஸ்பெஷல் வீடியோவில் தெரிவித்துள்ளனர் . இந்த பாடலை சிவகார்த்திகேயன், அதிதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயனை சித் ஸ்ரீ ராம் என்று கூறி, அதிதி சங்கரை ஸ்ரேயா கோஷல் என கூறி கலகலப்பான வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!