
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் மாநாடு
இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்று கடந்த ஒரு வார காலமாக அமைக்கப்பட்டு வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து இன்று அல்லது நாளை அங்கு கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இப்படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிம்பு நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்திலும் படப்பிடிப்புக்குத் தவறாமல் வருகை தந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது "மாநாடு".




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!