
மே 6ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் மாமனிதன்?
மார் 21, 2022
Advertisement
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். சில பிரச்னைகளால் நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் இப்போது வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. அதன்படி வருகிற மே 6-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாமனிதன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமைகளை வாங்கி தமிழகம் முழுவதும் ஆர்கே சுரேஷ் வெளியிடுகிறார் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!