
பிரபாஸை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!
ஜூன் 25, 2023
Advertisement
கமல் நடித்த விக்ரம் படத்தை அடுத்து தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இப்படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லியோ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று விட்டதாகவும், லியோ படம் திரைக்கு வந்ததும் அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்குவதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!