
நான் செய்யாததை லோகேஷ் செய்துள்ளார் : ஹரி
அதாவது லோகேஷ் படம் என்றாலே அதில் ‛எல்சியூ" எனப்படும் ‛லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்" இடம் பெறும். இதுபற்றிய கேள்விக்கு ஹரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛சிங்கம் 3 படத்திலேயே இதுபற்றி நான் யோசித்து இருக்கிறேன். அதாவது ‛சிங்கம்" சூர்யாவும், ‛சாமி" விக்ரமும் விமானத்தில் சந்திப்பது போன்றும், அவர்களுக்கு இடையே சில உரையாடல்களையும் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடமும் பேசி சம்மதம் பெறணும். அது பெரிய விஷயமாக இருந்ததால் என்னால் செய்ய முடியவில்லை. நான் செய்யாததை இப்போது லோகேஷ் சிறப்பாக செய்து வருகிறார் என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!