
வரிசை கட்டும் படங்கள் : கமல் 237-ஐ இயக்கும் அன்பறிவ்
ஜன 12, 2024
Advertisement
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2" படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்தப்படியாக கமல் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ‛கல்கி 2898 ஏடி" படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மணிரத்னத்தின் தக் லைப் படம் மற்றும் வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார்.
இந்த படங்கள் ஒவ்வொன்றாக துவங்க உள்ளன. கமல் நடித்து வரும் படங்களில் அவரும் ஒரு தயாரிப்பாளராக உள்ளார். இதுதவிர சிம்பு 48வது படம், சிவகார்த்திகேயன் 21வது படம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரிக்கிறார்.
இந்த படங்கள் ஒவ்வொன்றாக துவங்க உள்ளன. கமல் நடித்து வரும் படங்களில் அவரும் ஒரு தயாரிப்பாளராக உள்ளார். இதுதவிர சிம்பு 48வது படம், சிவகார்த்திகேயன் 21வது படம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரிக்கிறார்.
இந்நிலையில் கமலின் 237வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை இரட்டையர்களான ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவு இயக்குகின்றனர். முழுக்க முழுக்க ஆக் ஷன் படமாக உருவாகிறது. 2025ல் படம் துவங்குகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!