
அடுத்து சூப்பர் ஹீரோ படம் - ‛லெஜென்ட் சரவணனின் அடுத்த ‛டார்க்கெட்
கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சூப்பர் ஹீரோ கதைகளில் நடிப்பீர்களா? என்று நிருபர்கள் அவரைக் கேட்டபோது, கண்டிப்பாக நடிப்பேன். எனது அடுத்த படமே சூப்பர் ஹீரோ கதையில் தான் உருவாகிறது. அந்த படத்தை சர்வதேச அளவில் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது முதல் படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ள சரவணன், அடுத்த படத்தை சர்வதேச அளவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!