
‛குஸ்தி கற்றால் தன்னம்பிக்கை வரும் : ஐஸ்வர்ய லட்சுமி
படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். தஞ்சாவூருக்கு சென்ற படக்குழு அங்குள்ள ஒரு தியேட்டரில் மக்களுடன் படத்தை ரசித்தனர். இந்த நிகழ்வில் பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛முதல்முறையாக இந்த ஊருக்கு வந்துள்ளேன். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் எப்போதாவது தான் கிடைக்கும். இந்த படத்தில் முக்கியத்துவம் மட்டுமல்ல கொண்டாடும் அளவுக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற படம் ஆண்டுக்கு ஒன்று கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். குஸ்தி கற்றுக் கொண்டால் தன்னம்பிக்கை வரும், பாதுகாப்பு கிடைக்கும். விளையாட்டு மூலமே வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை எப்படி சரி செய்ய முடியும் என கற்றுக் கொள்ளலாம்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!