
லால் சலாம் டிரைலர் வெளியானது
பிப் 06, 2024
Advertisement
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு 9 .30 மணிக்கு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த டிரைலரில், ஊர் திருவிழா, இரண்டு பிரிவினருக்கிடையே கடும் மோதல். மொய்தீன் பாயாக ரஜினி சண்டைக் காட்சியோடு என்ட்ரி என அதிரடியான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, ‛‛ஊருக்குள்ள வெள்ளை வேஷ்டி கட்டிக்கிட்டு அல்லாஹு அக்பர்னு அஞ்சு நேரம் நமாஸ் பண்ணிக்கிட்டு, சாந்தியும் சமாதானமும் பேசிக்கிட்டு இருக்கிற ஆளுன்னு நெனச்சியா? பம்பாய்ல பாய் ஆளே வேறடா. மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை. மனித நேயத்தை அதற்கு மேல வை. அதுதான் இந்த நாட்டோட அடையாளம்..."" என இந்த லால் சலாம் டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் ஹைலைட்டாக அமைந்திருக்கின்றன. டிரைலர் வெளியான 14 மணிநேரத்தில் 14.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!