
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்திற்கு யுஏ சான்று
டிச 07, 2021
Advertisement
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் குருதி ஆட்டம். அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படம் ஆக்சன் கதையில் உருவாகியுள்ளது. அதோடு ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் டிசம்பர் 24-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தணிக்கைக்குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதர்வாவின் சமீபத்திய சில படங்கள் போதிய வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் தனக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக் கும் என்று நம்புகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு குருதி ஆட்டம் படத்தில் ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து அவர் நடித்துள்ளாராம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!