மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கிருஷ்ணா
ஆக 06, 2026
Advertisement
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பிமான கிருஷ்ணா "அஞ்சலி" படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு "அலிபாபா" படத்தின் மூலம் ஹீரோ ஆனார். தொடர்ந்து கற்றது களவு, கழுகு, யாமிருக்க பயமே, யட்சன், திருவிழா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் கடைசியாக கவுதம் மேனன் இயக்கிய "ஜோஸ்வா: இமை போல் காக்க" என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்போது "மர்டர் இன் டவுன்" என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பால சரவணன், வைபவ் முருகேசன், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், சரவணன், ஐ.எம். விஜயன், கிரிஷ் தயாள், கஜராஜ், தர்ஷிகா, பேபி நைனிகா, ஆகியோர் நடித்துள்ளனர்.
பாலகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார், மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் சார்பில் மகேந்திரராஜ் சந்தோஷ் குமார், கருணாநிதி வேலப்பன் மற்றும் சுபா வெங்கட் ஆகியோர் தயாரித்துள்ளனர். ரஞ்சன் இசையமைக்க, டி.கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக உருவாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!