
ஆஸ்கர் வாய்ப்பை இழந்த கூழாங்கல்
"கூழாங்கல்" படத்துடன் உலக அளவில் 93 நாடுகளிலிருந்து படங்கள் கலந்து கொண்டன. அவற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு 15 படங்கள் மட்டுமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். அந்த 15 படங்களின் பட்டியலில் "கூழாங்கல்" படம் தேர்வாகாமல் போய்விட்டது.
கடைசியாக அந்த போட்டியில் தேர்வான 15 படங்களின் பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டது. அந்தப் பட்டியலைப் பகிர்ந்து "கூழாங்கல்" படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இந்தப் பட்டியலில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சுத்தமான சினிமாவைத் தந்ததற்காக இயக்குனர் வினோத்ராஜைப் பாராட்ட வேண்டும். ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் எங்களது படத்தை தேர்வு செய்த இந்திய நடுவர் குழுவுக்கு எனது நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…