
கவின், நயன்தாரா இணையும் புதிய படம்
மே 22, 2024
Advertisement
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார். டாடா படத்தை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த "ஸ்டார்" திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரது கைவசமாக கிஸ், மாஸ்க் ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் பத்தல பத்தல, நான் ரெடி போன்ற பாடல்களை எழுதிய விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கவின் உடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனை செவன் ஸ்கிரீன் லலித் தயாரிக்கின்றார் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…