கசடதபற - ஓடிடி வெளியீட்டில் சிக்கல்?
ஆக 27, 2021
Advertisement
இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இன்று ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் "கசடதபற". இந்தியாவில் சோனி லிவ் ஓடிடி தளம் மூலமும், இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் இயக்குனர் வெங்கட் பிரபு புதிதாக ஆரம்பித்த "பிளாக் டிக்கெட் சினிமாஸ்" என்ற இணையதளம் மூலம் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
பொதுவாக ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளியானால் நள்ளிரவிலோ அல்லது முந்தைய தினம் இரவிலோ வெளியிடுவார்கள். பகலில் வெளியிடும் படங்களை வெளியாகும் நேரத்தைக் குறிப்பிட்டு வெளியிடுவார்கள்.
ஆனால், "கசடதபற" படத்தை இதுவரை எத்தனை மணிக்கு வெளியிட உள்ளோம் என்று சோனி லிவ் தளம் அறிவிக்காமல் உள்ளது. இதனிடையே, நேற்று மாலையே இப்படத்தின் பைரசி பிரின்ட் டெலிகிராமில் வெளியாகிவிட்டது என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
வழக்கம் போல நள்ளிரவில் சோனி லிவ் நிறுவனம் படத்தை வெளியிட்டதாகவும், ஆனால், பின்னர் நீக்கிவிட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியதற்காக வெளிப்புற படப்பிடிப்பு நிறுவனத்திற்குத் தர வேண்டிய கட்டணத் தொகையை வெங்கட் பிரபு அளிக்கவில்லையாம். அதனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்ததாகவும், எனவே, படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காலையில் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் தீர்வு ஏற்பட்ட பிறகுதான் படம் மீண்டும் வெளியாகும் என்கிறார்கள்.
அதே சமயம் படத்தின் பைரசி லின்க்குகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக சோனி லிவ் நிறுவனத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!