
கார்த்தி 27வது படத்தின் புதிய அப்டேட்
பிப் 23, 2024
Advertisement
"96" பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடைபெற்றுறது. நேற்றுடன் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும், இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதில் கார்த்தி அல்லாத மற்ற நடிகர், நடிகைகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இந்த படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!