பெங்காலி மொழியில் வெளியாகும் கார்கி
ஆக 12, 2022
Advertisement
சாய்பல்லவி நடித்த "கார்கி" படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2டி நிறுவனத்தின் மூலம் சூர்யா, ஜோதிகா வெளியிட்டனர். இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பொதுவாக ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும், இந்தப் படம் பெங்காலி மொழியிலும் வெளியாகி உள்ளது. பாலியல் வழக்கில் சிக்கிய தந்தையை காப்பாற்ற போராடும் மகளின் கதை. படத்தில் வருவது போன்ற ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருப்பதால் இந்த படம் பெங்காலி மொழியிலும் வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!