காந்தாரா சாப்டர் 1 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜூலை 07, 2025
Advertisement
கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1" உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று(ஜூலை 7) ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 இவ்வருட அக்டோபர் 2ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழில் அக்டோபர் 1ம் தேதியன்று தனுஷின் இட்லி கடை படம் திரைக்கு வருகிறது என அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!