14 மில்லியன் பார்வைகளைக் கடந்த கங்குவா டீசர்
மார் 20, 2024
Advertisement
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் படம் "கங்குவா". இப்படத்தின் டீசர் நேற்று மாலை யு டியூபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திற்கு முன்பாக 14.5 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
கடந்த வருடம் ஜுலை மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் அறிமுக டீசர் வீடியோ 24 மணி நேரத்தில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. நேற்று வெளியான டீசர் அந்த சாதனையைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
"கங்குவா" டீசரில் அதன் மேக்கிங்கும், சூர்யா, பாபி தியோர் ஆகியோரது தோற்றமும் ரசிகர்களால் பாராட்டைப் பெற்றுள்ளது. சரித்திரப் படங்களாக வெளிவந்த "பொன்னியின் செல்வன் 1, 2" படங்களை விடவும் சரித்திரப் படமான "கங்குவா" டீசர் இன்னும் எத்தனை பார்வைகளைக் கூடுதலாகப் பெறப் போகிறது என்பது படத்திற்குக் கிடைக்கும் வரவேற்புக்கும் ஒரு உதாரணமாய் அமையும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!