தலைவி அப்டேட் கொடுத்த கங்கனா
மார் 22, 2021
Advertisement
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "தலைவி" படத்தின் டிரைலர் படத்தின் நாயகி கங்கனா ரணவத் பிறந்த நாளான நாளை மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பற்றிய மேலும் சில அப்டேட்களை கங்கனா கொடுத்துள்ளார்.
“திரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஒரு மேஜிக்கல் ஜோடியாக இருந்தனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது போல ஒரு ஜோடி வராது. "தலைவி" படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடையை பெறுவதும், அதை சில மாதங்களுக்குள் இழப்பதும். இன்னும் சில மணி நேரங்களுக்குள் அந்தக் காத்திருப்பு முடிவடைய உள்ளது. ஜெயா என்றென்றும் உங்களுக்காக,” என படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
"தலைவி" படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…