
இந்தியன் 2 பஞ்சாயத்தில் இறங்கிய கமல்ஹாசன்
ஆனால், அதற்குப் பிறகும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகாமல் இழுத்துக் கொண்டே போனது. இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்களிருவருக்கும் இருக்கும் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.
நீதிமன்ற அறிவுறுத்தலின் படி இருவரும் பேசியும் தீர்வு வரவில்லை. இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்து தனது சினிமா பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க கமல் முடிவெடுத்துள்ளாராம். அவர் ஏற்கெனவே "விக்ரம்" படத்தை அறிவித்துவிட்டாலும், "இந்தியன் 2" படத்தை முடித்துவிடுவோம் என அதற்கான பஞ்சாயத்தில் இறங்கிவிட்டதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
கமல்ஹாசனே பஞ்சாயத்தில் இறங்கிய பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய இரு தரப்பினரும் கொஞ்சமாவது விட்டுக் கொடுத்து படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து வைக்க வேண்டும் என கமல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
விரைவில் "இந்தியன் 2" விவகாரம் முடிவுக்கு வரும் என்று சொல்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!