கார்த்தியை இயக்கும் கல்யாண சங்கர்
மே 08, 2026
Advertisement
தமிழில் டானாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 1960 காலகட்ட கதையில் இப்படம் உருவாகிறது. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சத்யராஜ், பிரபு, ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இது தவிர பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, பாண்டியராஜ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் மேட் என்ற படத்தின் மூலம் பிரபலமான கல்யாண சங்கர் இயக்கும் படத்திலும் கமிட்டாகி உள்ளார் கார்த்தி . இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. இதில் கார்த்திக் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க, காமெடியனாக யோகி பாபு நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!