மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட்
மே 16, 2025
Advertisement
குணசித்ரம் மற்றும் காமெடி நடிகரான காளி வெங்கட், தோனிமா, குரங்கு பெடல் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீண்டும் கதைநாயகனாக நடித்துள்ள படம் "மெட்ராஸ் மேட்னி".
இந்த படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். சத்யராஜ், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி.கே.ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!